திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக, பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடியது. குருமலை குழிப்பட்டி, துணியால் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.