news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தில் இருக்குதா? சேலத்தில் கர்ஜித்த தவெக தலைவர் விஜய்
tv

Also Watch

tv

Read this

தில் இருக்குதா? சேலத்தில் கர்ஜித்த தவெக தலைவர் விஜய்

FULL SPEECH

105

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் தவெக கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது;

நம்மை நிரூபிக்கும் பவர்
நம்மை ஏளனமாக பார்க்கும்போது, தாழ்வாக நடத்தும்போது நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என ஒரு புள்ளி தோன்றும், எந்த நேரத்தில் நம்மை கேலியும், கிண்டலும் செய்கிறார்களோ அங்கிருந்து தான் நம்மை நிரூபிக்கும் பவர் ஸ்டார்ட் ஆகிறது என, தவெக தலைவர் விஜய் பேச தொடங்கினார்.

தமிழ்நாடு தான் என் வீடு
விஜய் வீட்டை விட்டு வெளியே வா... விஜய் பனையூரை விட்டு வெளியே வா... என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்க இருக்கு என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு நான் சொல்கிறேன். என் தாய்நாடான தமிழ்நாடு தான் என் வீடு.

நீதி கேட்டு வந்திருக்கேன்
உங்க கிட்ட ஓட்டு மட்டும் கேட்கவில்லை; நீதி கேட்டும் வந்திருக்கிறேன். தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான் இந்த விஜய், அது ஒரு தப்பா? நான் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக விட்டுட்டு வந்தேன்; அது ஒரு தப்பா?

என் வீட்டில் 8 கோடி பேர்
என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் என் சொந்தம். தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக, முதல் பாதுகாவலனாக நிற்பதே எனது குறிக்கோள்

இது என்னங்க நியாயம்?
நான் மக்களை சந்திக்கவோ, இல்லை மக்கள் என்னை சந்திக்கவோ, எனக்கு உரிய பாதுகாப்போ, அனுமதியோ தரமாட்டாங்க. மற்ற கட்சிகளுக்கு தரும் உரிமையை ஏன் எங்களுக்கு தருவதில்லை; இது என்னங்க நியாயம்?

செல்ஃபே எடுக்காத கணக்கு
அவர்களின் செல்ஃபே எடுக்காத பழைய அரித்மேட்டிக் கணக்கு வேலைக்கே ஆகாது. காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற கனவும் இனி நடக்காது
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 08042026

1
3 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved