சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி காரணமாக, சிங்கப்பூர், டெல்லி, கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த மலேசியா, சிங்கப்பூர், டெல்லி ஆகிய மூன்று விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய பெங்களூர், கோவை விமானங்களும் ரத்தானது. அதேபோல், கொல்கத்தா, கவுகாத்தி, அந்தமான், ஜெய்ப்பூர், மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.