மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசையோ, பிச்சையோ, கடனோ கேட்கவில்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார். மும்மொழிக்கொள்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் சென்னை பாரிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.