Also Watch
Read this
By: Manigandan Raja

நொண்டி கொண்டிருக்கிறது :
மானாமதுரை நகராட்சியின் கீழ் செயல்பட்டுவரும் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விட்டதில் முறைகேடு, வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் நகராட்சி பகுதிக்குள் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி வழங்குவதில் முறைகேடு என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதனை கண்டித்து இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதுடன் ஏராளமான
அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் வீட்டிற்கு செல்லும்போது 5 ஆயிரம்
அறிவித்திருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் 5 ஆயிரம் வழங்கியதுபோன்ற திட்டம் 5 மாநிலங்களில் தோல்வியையே தந்துள்ளது என்றும்.
ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொடர் திட்டங்களால் அது வெற்றியடைந்துள்ளது. என்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது திமுகவின் வேலை என்றும் அவர்களே அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு கிடைக்க கூடிய திட்டங்களை தடுப்பது அவர்களின் செயல் என்றும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கு எதிராக வழக்கு தொடர்தவர்கள் யார்?
என்பது மக்களுக்கு தெரியும் எனவும் இண்டி கூட்டனி குறித்த கேள்விக்கு காங்கிரஸ், திமுக கூட்டனி ஆடிப்போயும், கலகலத்துப்போயும் உள்ளது எனவும், என்.டி.ஏ கூட்டனி விஸ்வரூபம் எடுத்து
வளர்ந்துகொண்டே வருகிறது.
ஆனால் இண்டி கூட்டனி நொண்டிக்கூட்டனியாக மாறி நொண்டிக்கொண்டிருக்கிறது எனவும் பேசியதுடன் தமிழகத்தில் பருப்பு வேகாது என கூறிய உதயநிதிஸ்டாலினின் கருத்திற்கு தமிழகத்தில் அனைத்து பருப்புகளும் சட்டியில்போட்டால் வேகும் எனவும்.
பேசிய நிலையில் விஜயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு விஜய் பரிட்சை எழுதட்டும் மக்கள் என்ன மதிப்பெண் கொடுக்கிறார்கள் என பார்த்துவிட்டுதான் அவரை விமர்சனம் செய்ய முடியும் என்றும் விஜய்க்கு அனுபவம் போதாது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியாக கருனாநிதி ஆட்சி இருந்தபோதிலும் கூட்டனி ஆட்சி என்பது இல்லை எனவும்.
விஜய் களத்தில் இல்லாமலேயே இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார். காலமும், மக்களும் அதற்கு தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved