தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தென்பெண்ணை ஆற்றுக்கு உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில் இரசாயன நுரை குவியல் குவியலாக வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில் 40.67 அடியை எட்டியதால், அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 272 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் நிலையில் அதில் கடுமையான துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக இரசாயண நுரை சென்றது.