கோவை மாவட்டத்தில் சட்ட விரோத செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுரங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.செம்மண் கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஆட்சியர் ஆய்வுக்கு பிறகும் செம்மண் கொள்ளை நடைபெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத செங்கல் சூளைகள் செயல்படும் பகுதிகளிலும், செம்மண் கொள்ளை நடக்கும் பகுதிகளிலும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட லோக் அதாலத் தலைவர் நாராயணனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.