news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இந்த தொகுதியில் வென்றால் ஆட்சி
tv

Also Watch

tv

Read this

இந்த தொகுதியில் வென்றால் ஆட்சி

வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், முருகனின் ஐந்தாம் படை வீற்றிருக்கும் திருத்தணி தொகுதியை கைப்பற்ற போட்டி சூடுபிடித்துள்ளது. சிட்டிங் திமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சொந்த கட்சியின் முன்னாள் மா.செ., காய் நகர்த்தி அதிகாரமிக்க நபர் மூலம் துண்டு போட்டு வரும் நிலையில், திருத்தணியில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற செண்டிமெண்ட் இந்த முறையும் எடுபடுமா என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

அதிமுக 6 முறை, திமுக 3 முறை
ஆந்திரா மாநில எல்லையில் அமைந்திருக்கும் திருத்தணி தொகுதியில் நெசவு, விவசாயம் உள்ளிட்டவை பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வன்னியர்கள், செங்குந்த முதலியார், பட்டியலின மக்கள் கணிசமாக வசித்து வரும் இந்த தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ், பாமக, தேமுதிக கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இருவருக்கும் இடையே பகை
இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சந்திரன், மீண்டும் திருத்தணி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி தலைமைக்கு தூது அனுப்பி வரும் நிலையில், அவருக்கு போட்டியாக திமுகவிலேயே பூபதி என்பவரும் காய் நகர்த்தி வருகிறார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக முதலில் பூபதி தான் இருந்தார். வழக்கமாக திமுகவில் மாவட்ட செயலாளருக்கு தான் சீட்டு வழங்கப்படும் என்ற நிலையில், பூபதி மாவட்ட செயலாளராக இருக்கும் போதே, நீண்ட கால சீனியர் என்ற அடிப்படையில் சந்திரனுக்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுத்தது. எம்.எல்.ஏ.வாக சந்திரன் வெற்றி பெற்ற பின்னர் தலைமையிடம் பேசி பூபதியிடம் இருந்த மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை பறித்துக் கொள்ள, இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. 2021 தேர்தலில் தனது கட்டுப்பாட்டில் இருந்த திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த பூபதிக்கு தலைமையிடத்தில் நல்ல செல்வாக்கு இருந்தாலும், தனக்கு தெரிந்த வழிகளில் காய் நகர்த்தி சந்திரன் மாவட்ட செயலாளர் பொறுப்பை பறித்துக் கொண்டது இருவருக்கும் இடையே பகையை உருவாக்கியது.

நம்பிக்கையோடு இருக்கிறாராம்
இதன் காரணமாக, சந்திரனுக்கு சீட்டு கிடைக்க விடக் கூடாது என குறியாக இருக்கும் பூபதி, கடந்த முறை கோட்டை விட்டது போல இல்லாமல் திருத்தணி தொகுதியை தன் வசமாக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறாராம். சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரனுக்கு எதிரான அதிருப்தி மன நிலைமையில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து கடும் எதிர்ப்பு இருப்பது போல காட்டும் பூபதிக்கு, மேலிடத்தில் இருக்கும் முக்கியமான பவர் செண்டரின் அருளும் இருப்பதாக சொல்கிறார்கள். இது தவிர்த்து திமுகவின் பணக்கார எம்.பி.யான ஜெகத்ரட்சகனின் சிபாரிசும் இருப்பதால் வருகிற தேர்தலில் சீட்டு வாங்கி விடலாம் என நம்பிக்கையோடு இருக்கிறாராம் பூபதி.

அதிமுக வேட்பாளருக்கு சிக்கல்
திமுகவில் தான் நிலைமை இப்படி என்றால் அதிமுகவில் அதற்கு மேல் என்று தான் சொல்ல வேண்டும். 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2021 தேர்தலில் நரசிம்மனுக்கு பதிலாக கோ.அரி என்பவருக்கு அதிமுக சீட்டு கொடுத்தது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நரசிம்மன் எதிர் தரப்பு அணியுடன் சேர்ந்து கொண்டு சொந்த கட்சி வேட்பாளருக்கே எதிராக வேலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கோ.அரி மூலமாக தலைமைக்கு புகாராக செல்ல, நரசிம்மனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்தது. இதற்கு பிறகு சசிகலா அணியில் ஐக்கியமான நரசிம்மன், கோ.அரிக்கு எதிராக முழு நேரமும் உள்ளடி வேலையில் இறங்கியிருக்கிறாராம். கோ.அரியை தோற்கடிக்க வேண்டும் என யோசித்து வருகிற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட நரசிம்மன் முடிவு செய்திருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளருக்கு சிக்கல் எழுந்திருக்கிறது.

இந்த முறையும் எடுபடுமா?
புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டில்லி பாபு திருத்தணி தொகுதியில் போட்டியிடக் கூடும் என சொல்லப்படும் நிலையில், மொத்தத்தில் முருகனின் அருள் யாருக்கு கிடைக்கும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருத்தணி தொகுதியில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ. எந்தக் கட்சியோ, அந்தக் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற செண்டிமெண்ட் அந்த தொகுதி மக்களிடம் உள்ளது. அந்த செண்டிமெண்ட் இந்த முறையும் எடுபடுமா? என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரியவரும்.

Related Link
அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்

அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்

1
5 hrs 26 mins agoshare
தர்மபுரி தேர்தல் புறக்கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved