வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இம்மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சனியன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டியது. இந்நிலையில், இரவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டது.