மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. மயிலாடுதுறை நகரப்பகுதி, குத்தாலம், மங்கைநல்லூர், தேரழந்தூர், கோமல், செம்பனார்கோவில், மன்னம்பந்தல், வடகரை, நீடூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கையாக பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.