கன்னியாகுமரி மாவட்டத்தில் GRINDR GAY செயலி மூலம் ஆண்களை வரவழைத்து நகை, பணத்தை அபகரித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். ராஜகமங்கலத்தை சேர்ந்த நபர் ஒருவர், செயலி மூலம் தன்னை வரவழைத்த புன்னை நகரை சேர்ந்த ஆன்ரோ என்பவர், தன்னிடமிருந்த நகை, பணத்தை பறித்துக் கொண்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆன்றோ மட்டுமல்லாது, ஈத்தங்காடு சூர்யா, எறும்புக்காடு அஜய் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த செயலி மூலம் பல ஆண்களை வரவழைத்து, ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டி நகை, பணத்தை பறித்தது தெரியவந்தது.