மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பாதுகாவலர்கள் ஏலச் சீட்டு குலுக்கல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்கள், 303-வது வார்டு கர்ப்பகால சர்க்கரை நோய் பிரிவு முன்பு ஏலச்சீட்டு குலுக்கலில் ஈடுபடுவதும், சாமி கும்பிட்டபடி ஏலச்சீட்டை எடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.