news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை
tv

Also Watch

tv

Read this

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை

பெத்துப்பட்டி, திருச்சி

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Farmers sad

நெல் கொள்முதல் :

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெத்துப்பட்டி பகுதியில் செயல்பட வேண்டிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 20 நாட்களாக திறக்கப்படாததால், விவசாயிகள் கொட்டி வைத்த நெல் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக முளைத்து சேதமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் விளைந்த நெல் குவியலாக கெட்டு போவதை பார்த்து, விவசாயிகள் கண்ணீருடன் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாயத்துக்கு வாங்கிய மூலபொருள்களின் கடன் சுமை, மற்றும் அறுவடை கூலி சுமை ஏறுவதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் காட்சி காண்போரை பதபதக்க வைக்கிறது

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், இன்னும் ஒரு சில தினங்களில் தங்களது நெல்களை கொள்முதல் செய்யவில்லை என்றால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேதமடைந்த நெல்லை கொட்டி வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், சேதமடைந்த நெல்லுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Link
2-ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் கடத்தல்

2-ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் கடத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 40 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved