ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் தமிழ்நாடு அரசு பேருந்தும், கர்நாடக அரசு பேருந்து பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் இருந்து மைசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், மைசூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தும் 23-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தமிழ்நாடு அரசு பேருந்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.