சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு, தனியார் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு இலவச உணவு வழங்க 64 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும், 31 ஆயிரத்து 373 தூய்மைப் பணியாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, நாள்தோறும் வழங்கப்பட உள்ள உணவு வகையின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.இதையும் பாருங்கள் - தூய்மை பணியாளர்களுக்கு புதிய திட்டம், மேயர் பிரியா பகிர்ந்த தகவல் | SanitationWorkers | NewScheme