news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏடிஎம் மையத்தில் மோசடி, ஒருவர் கைது, 210 கார்டுகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ஏடிஎம் மையத்தில் மோசடி, ஒருவர் கைது, 210 கார்டுகள் பறிமுதல்

தர்மபுரி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
atm card thift

ஏடிஎம் மையத்தில், பணம் எடுப்பவர்களை குறி வைத்து, கார்டை மாற்றி, மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து, சுமார் 210 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி நகரைச் சேர்ந்த இப்ராஹிம், ஏடிஎம் மையத்தில், பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால், இரண்டு முறை முயற்சி செய்தும், பணம் எடுக்க முடியவில்லை. அப்போது, ஏடிஎம் அருகிலேயே நின்றிருந்த ஒருவர், தான் பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி உள்ளார். அந்த நபர் பணம் எடுத்த போதும், பணம் வராததால், ஏடிஎம் கார்டை திருப்பி கொடுத்து விட்டார். ஆனால், சிறிது நேரம் கழித்து, இப்ராஹிம் தனது ஏடிஎம் கார்டை பார்த்தபோது, அது தன்னுடையது இல்லை என தெரிய வந்தது. அந்த நபரை பிடித்து, தர்மபுரி நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சம்பாஜி என்பது தெரிய வந்தது.

ஏடிஎம் மையத்தில், பணம் எடுக்க வரும் முதியவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களை குறி வைத்து, பணம் எடுத்துக் கொடுப்பது போல், ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு, மொத்த பணத்தையும் எடுத்துச் செல்லும் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. சம்பாஜியை காவல் துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த சுமார் 210 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

1
10 hrs 18 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved