Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்ததால், பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடும்பாறை கிராமத்தில் இருந்து பொன்னன்படுகை கிராமத்திற்கு 3 கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில்,
வனத்துறைக்கு உட்பட்ட அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனை கண்டித்து, மயிலாடும்பாறை கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வனத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved