Also Watch
Read this
Posted on: Nov 27, 2025 02:40 PM
By: Web Team

ராசிபுரம் அருகே கடைகளுக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கடைக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3 பேர், டீ கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடை, ஹோட்டல்கள் என 500 முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதித்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர்கள், போலி அதிகாரிகள் எனக் கூறி 3 பேரையும் சிறைப்பிடித்து மிரட்டி அச்சுறுத்தினர். நீண்ட நேரத்துக்கு பிறகு போலீஸார் வந்து 3 பேரையும் மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved