இராமநாதபுரம் அருகே களிமண்குண்டு கடற்கரையை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் அச்சுறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். அப்பகுதியில் குடிசை அமைத்து குடியிருந்து வரும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வலைகளை உலர்த்தவும், மீன்களை காய வைக்கவும் கடற்கரையையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கீழக்கரை வட்டாட்சியரின் உத்தரவின் பேரில், எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வலைகளை காய வைக்கும் குடிசைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.