கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் முதன்முதலாக வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம் நடைபெற்றது. இடிகரை கிராமிய கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனத்துடன் காவடியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் 60க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று பாடலுக்கேற்ப நடனம் ஆடினர்.