Also Watch
Read this
மதுரையில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
உயிரிழந்தோர் 3 ஆக உயர்வு
Updated: Sep 17, 2024 01:11 PM
மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விசாகா பெண்கள் தங்கு விடுதியில் கடந்த 12 ஆம் தேதி ப்ரிட்ஜில் தீ விபத்து ஏற்பட்டு அதிகளவு நச்சு புகை வெளியேறியது.
இந்த விபத்தில் பரிமளா சௌத்ரி, சரண்யா என்ற இரு ஆசிரியர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
விடுதியில் இருந்தவர்களை பத்திரமாக மீட்ட விடுதி மேலாளர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved