திருவள்ளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.