Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மூடப்பட்டு கிடக்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் நெமிலியிலிருந்து பாணாவரம் செல்லும் சாலையில் விவசாயிகள் நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி வட்டாட்சியர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved