மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு விரோதமாக செயல்படுவதாக கூறி விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.