காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ரோஜா மலருக்கு உரிய விலை கிடைத்தபோதும், அதிகப்படியான பனிப்பொழிவால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் வேலை ஆட்கள் இப்பணியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.