போலி ஸ்டாக் மார்க்கெட் விளம்பரத்தை நம்பி 2 பேர் 2 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் மற்றும் ஐ.டி. ஊழியர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த குணசீலன், லட்சுமணப்பெருமாள் ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.