news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிமுக அரசைப் பற்றி பேச முகாந்திரம் இல்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

அதிமுக அரசைப் பற்றி பேச முகாந்திரம் இல்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு

5 ஆண்டுகளாக தன்னைப் பற்றியே விமர்சனம்

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவை பற்றியும், அதிமுக அரசை பற்றியும் பேச எந்த முகாந்திரமும் இல்லாததால், தொடர்ந்து ஐந்தாண்டு காலமாக தன்னை பற்றியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாகையில் பிரச்சாரம் செய்த அவர், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டு தற்போது மீட்டெடுப்பதாக கூறி, திமுக இரட்டை வேடம் போடுவதாக சாடினார்.

நாகையில் இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
முதல்வர் ஸ்டாலின் தனது பிரசாரங்களில், மக்களை பற்றி பேசாமல் என்னை அவதுாறாக பேசி வருகிறார். 'சாக்கடைக்கு சமமான வார்த்தைகளை இபிஎஸ் பேசுகிறார் என ஸ்டாலின் கூறியுள்ளார், உண்மையில் சாக்கடையில் இருப்பதே அவர்கள்தான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களை தான் வாரிசாக பார்த்தனர். ஆனாலும், திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் தவிர, மற்றவர்கள் யாரும் கட்சியிலும் ஆட்சியிலும் உயர்பதவிக்கு வர முடியாது. ஆனால், அதிமுகவில் சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக முடியும்; முதல்வராக முடியும். அதற்கு நானே உதாரணம்.

வலிமையான சக்தி அதிமுக
தமிழகத்தில், வலிமையான சக்தியாக அதிமுக திகழ்கிறது. எம்ஜிஆர் மறைந்தவுடன், அதிமுக காணாமல் போய் விடும் என்றனர்.

ஆனால், ஜெயலலிதா கட்சியை நிலைநிறுத்தினார். அவரின் மறைவுக்குப் பின், அதிமுகவை ஒழிக்க ஸ்டாலின் சதி செய்தார். அதையெல்லாம் மக்கள் துணையுடன் முறியடித்துள்ளோம்.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.

Related Link
2026ல் ஸ்டாலின் மேஜிக் நிகழுமா? தொடருமா திராவிட மாடல்?

2026ல் ஸ்டாலின் மேஜிக் நிகழுமா? தொடருமா திராவிட மாடல்?

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
10 hrs 9 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved