கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதாகவும் அவ்வபோது யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்குவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் திப்பசந்திரம் அணைக்கட்டு அருகே நீர் நிலையில் 10க்கும் மேற்பட்ட யானைகள் ஆனந்த குளியல் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.