news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேருந்து எலக்ட்ரிக்கல் வேலையின் போது மின்கசிவு
tv

Also Watch

tv

Read this

பேருந்து எலக்ட்ரிக்கல் வேலையின் போது மின்கசிவு

அகிலாண்டபுரம், திருச்சி

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Bus fire

பேருந்து மின்கசிவு :

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அகிலாண்டபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் சொந்தமாக கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு எலக்ட்ரீக்கல் பழுது பார்க்கும் கடை வைத்து பணியாற்றி வருகிறார்.

இந்த கடையில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்றிற்கு ஊழியர்கள் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து திடீரென எலக்ட்ரிக் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி
எரிந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ மளமளவென பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
திருமண நிகழ்ச்சிக்காக பேனர் வைத்த இளைஞர்கள்

திருமண நிகழ்ச்சிக்காக பேனர் வைத்த இளைஞர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

1
9 hrs 2 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved