Also Watch
Read this
By: Manigandan Raja

தேர்தல் ஆணையம் நோட்டீஸ் :
வரும் சட்டசபை தேர்தவில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஈடுபடுவோர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இதன்படி கடந்த 28ம் தேதி நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு நாகப்பட்டினம் இஜிஎஸ் பொறியில் கல்லூரியிலும் , கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு தேவூரில் உள்ள இன்பென்ட் ஜோசப்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்கு வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடந்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் 700 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 3 ஆயிரத்து 360 வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்த முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நேற்று பயிற்சியில் பங்கேற்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என
விளக்கம் அளிக்க வேண்டும் என விளக்க கடிதம்(s.லீஷீஷ் நீணீமீ) அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நோட்டீசை பார்த்தவுடன் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியது: கடந்த 30ம் தேதி அறிவியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு சிறப்பு வகுப்பு எடுக்க சென்றதால்.
தேர்தல் முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. ஆசிரியர்களை சிறப்பு வகுப்பு எடுக்க அனுப்பியது சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் தான்.
மாணவர்கள் நலனில் அக்கரை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்பு எடுக்க சென்ற எங்களால் தேர்தல் ஆணையம் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் இது போல் சிறப்பு வகுப்பிற்கு சென்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பில் செல்ல வேண்டாம் என விலக்கு அளித்து
முன் அனுமதி பெற்றுள்ளார்.
அதே போல் கோயம்புத்துர் மாவட்ட கல்வி அலுவலகம்(இடைநிலை) சார்பில் மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு விடுப்பு உரிய அனுமதியுடன் பெற்றுவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகள், புற்றுநோய் பாதிப்புடையவர்கள், கன்னியாஸ்திரிகள், 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளவர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறை என்பது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும். ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் விதிமுறை மாற்றமாக உள்ளது.கன்னியாஸ்திரிகள் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை என்பதற்காக விளக்கம் கேட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதை விட மிகவும் வேதனையான விஷயம் கடந்த 25ம் தேதி(25.3.2026) கீழ்வேளூர் தாலுகா மணலுர் ஸ்ரீ கலைமகள் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர் பாலசெல்வன் இறந்து
விட்டார்.
இவர் ஏன் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இது போல் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 98 மற்றும் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் 75 பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பிள்ளது.
தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது என்பதை தேர்தல் ஆணையத்தின் விளக்க கடிதத்தில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம் என கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved