news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுகவுக்கு தில், திராணி இருக்கிறதா? - விஜய்
tv

Also Watch

tv

Read this

திமுகவுக்கு தில், திராணி இருக்கிறதா? - விஜய்

சேலம், சீலநாயக்கன்பட்டி

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல், தன்னைப்போல் தன்னந்தனியாக கட்சி ஆரம்பித்து 1 சதவீத வாக்கு வாங்க முடியுமா? என விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணியளவில், தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார்.

நம்மை ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில்...
இந்த உத்வேகம் தான் ஒரு சக்தியைக் கொடுக்கும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நம்மைக் குறைவாக எடைபோடும் நேரத்தில் தான், உத்வேகம் பிறக்கும். நாம் யார் என்று காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசினார்களோ? அந்த விஷயத்தில் நம்மை நேர்மறையாக மாற்றுவதற்கு உத்வேகம் வரும். அங்கிருந்துதான் அந்த சக்தி உருவாகிறது.

என் வீடு எதுன்னு தெரியுமா?
என்னைப் பற்றி பேசிய அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாமா? ஏ, விஜய் வீட்டை விட்டு வெளியே வா, என்கிறார்கள். அவர்களுகு என் வீடு எதுன்னு தெரியுமா? எங்க இருக்குன்னு தெரியுமா? என்னை சீண்டிப் பார்ப்பதாக நினைத்து கேலியும் கிண்டலுமாக பேசுபவர்களுக்குச் சொல்கிறேன். தமிழ்நாடு உங்களுக்கு மாநிலமாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா? 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் வீடு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் என் சொந்தம். தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக அவர்கள் கூட நிற்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். அந்த எட்டு கோடிப் பேருக்கும் எல்லாமுமாக நிற்கப் போவது இந்த விஜய் தான். எல்லாம் கொடுக்கப் போவதும் நான் தான்.

நீதி கேட்டு வந்துள்ளேன்
உங்களிடம் வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை. ஆனால், உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்காக நீதி கேட்கத்தான் வந்தேன். ஆனால் உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தேன். மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தது தவறா? எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தது தவறா? பொதுக்கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். மற்ற கட்சிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால், எனக்கு கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டார்கள், கொடுக்கவும் விட மாட்டார்கள். இது என்ன நியாயம்? மக்களை நான் சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் விட மாட்டார்கள் என்று கூறினார்.
இவ்வாறு விஜய் பேசினார்.

Related Link
காதில் விசிலை ஊதி அனுப்பிவிடுங்கள் - விஜய் பேச்சு

காதில் விசிலை ஊதி அனுப்பிவிடுங்கள் - விஜய் பேச்சு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
8 hrs 20 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved