Also Watch
Read this
By: Manigandan Raja

திருவிழாவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு :
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஸ்ரீ கூந்தலுடைய அய்யனார் கோவில் வைகாசி மாதபுரவி எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் பத்து நாள் விழா நடைபெற்று
வருகிறது இந்நிலையில் பல்வேறு சமுதாய மக்கள் உள்ள இந்த கிராமத்தில் ஒரு தரப்பினருக்கு மட்டும் திருவிழாவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையால் திருப்பத்தூர் DSP செல்வகுமார் தலைமையில் ஒரு வாரம் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .
திருவிழாவை நடத்த சொல்லிவிட்டு நேற்று திடீரென நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது எனக் கூறி கோவில் வளாகத்தில் உள்ள மின்விளக்கு அனைத்தும் போலீசாரால் அப்புறப்படுத்தபட்டதால் ஆத்திரமடைந்த சதுர்வேதமங்கலம் கிராம மக்கள் பிரச்சினையை தூண்டிவிடும் டிஎஸ்பி செல்வகுமாரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

சுமார் நான்கு மணி நேரம் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்படைந்து . சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரம்பரியமாக சுமூகமாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒரு குறிப்பிட்ட சிலருக்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டி சாலை மறியலில் கண்டன முழக்கமிட்டனர் .
சதுர்வேதமங்கலம் கூந்தலுடைய அய்யனார் கோவில் திருவிழா பிரச்சனை ஆனதற்கு போலீசாரே காரணம் என குற்றம்சாட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் பகுதியில் ஒரு
பதட்டமான சூழ்நிலை உருவானது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் விலகிக்கொள்ளப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved