Also Watch
Read this
By: Manigandan Raja

படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு :
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடி கலந்த கதைக்களத்தில் உருவான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது எடுக்கப்பட்டுள்ள 2-ம் பாகம் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாகிறது.
ஆர்யாவின் 36 வது படமான ‘அனந்தன் காடு’ :

ஆர்யாவின் 36 வது படமான ‘அனந்தன் காடு’ திரைப்படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை 'ரன் பேபி ரன்' படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி, இப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
அர்ஜூனின் பிளாஸ்ட் படத்திற்கு நல்ல வரவேற்பு :

திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் அர்ஜூனின் பிளாஸ்ட் திரைப்படம் 4 நாட்களில் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களிடம் மோதுகிறார்கள் என்பதைமையமாக வைத்து சுவாரஸ்யமாக கதைக்களத்தில்
சுபாஷ் கே ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்
எஸ்.கே. - வெங்கட் பிரபு கூட்டணி படம் கைவிடப்பட்டதா?
சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தை நடித்து வருகிறார்.
இதன் பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைந்து சைன்ஸ் ஃபிக்சன் கதையில் நடிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை.
முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தில் நீடிக்கும் சர்ச்சை :
முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் நீடிக்கும் சர்ச்சை தொடர்பாக படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் வெளிப்படையாக பேச வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஜனநாயகன் ரிலீஸ் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வினோத், அதை சொல்லும் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved