Also Watch
Read this
By: Manigandan Raja

உறுப்பினர் கடமைகளை மீறியதாக கனடா மீது நடவடிக்கை :
உறுப்பினர் கடமைகளை மீறியதாக கனடா கிரிக்கெட் அணியை உறுப்பினர் பதவியில் இருந்து ஐசிசி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
அகமதாபாத்தில் நடைபெற்ற தனது வாரிய கூட்டத்தின் போது, நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மகளிர் கிரிக்கெட்டை ஆதரித்தல், விளையாட்டில் புதுமைகளை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டுக்கு 50 சதவிகிதம் அபராதம் விதிப்பு :

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில், சாம்பியன்ஸ் அணியான ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியின் போது குஜராத் அணியிடம் தமது விக்கெட்டை இழந்த விரக்தியில் அங்கிருந்த 'ஐஸ் பேக்' (Ice Bag) ஒன்றை கள நடுவரை நோக்கி டிம் டேவிட் ஆக்ரோஷமாக வீசினார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின் படி குற்றமாகும்.
கணவர் விராட் உடன் அனுஷ்கா இருக்கும் புகைப்படம் :

ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு கணவர் விராட் கோலியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை நடிகை அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ளார். அதில் விராட் ஐபிஎல் கோப்பையை ஏந்தியிருக்க, அனுஷ்கா அவரது நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். நெகிழ்ச்சியான அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved