news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news வாழ்த்தியவர்களுக்கு நன்றி - இளையராஜா மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

வாழ்த்தியவர்களுக்கு நன்றி - இளையராஜா மகிழ்ச்சி

வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனது 83ஆவது பிறந்தநாளை ஒட்டி வாழ்த்து கூறிய அனைவருக்கும் இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்து, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

முதல்வர் விஜய் வாழ்த்து
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய், வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது;
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” மூலமாக திரைத் துறையில் கால் பதித்து, உலகப் புகழ் வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார். உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்து. கருணாநிதி மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்த நாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று கருணாநிதி பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்.

பாமக தலைவர் அன்புமணி
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளருமான இசைஞானி இளையராஜா பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளைய ராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான். இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
இசை உலகின் ஈடு இணையற்ற மா மேதையாகவும், கோடிக் கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி இளையராஜாவின் பிறந்த தினம் இன்று. கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இளையராஜா நன்றி தெரிவித்து வீடியா
பிறந்தநாளைக் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவைக் காணத் திரண்ட அவரது ரசிகர் கூட்டம், கோடம்பாக்கம் அலுவலகம் முன்பாக அவரது பாடல்களைப் பாடி வாழ்த்து மழை பொழிந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வீடியோ வெளியிட்டு மகிழ்ந்து உள்ளார்.

Related Link
சிம்பொனியில் இசை ராஜாங்கம், திரையிசையில் ஒலித்த பாடல்கள்

சிம்பொனியில் இசை ராஜாங்கம், திரையிசையில் ஒலித்த பாடல்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தல்

0
3 hrs 39 mins agoshare
திக்விஜய் சிங்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved