news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காளியம்மன் கோயிலில் மாசி மாத தீமிதி திருவிழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

காளியம்மன் கோயிலில் மாசி மாத தீமிதி திருவிழா கோலாகலம்

எடப்பாடி, சேலம்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem temple

தீமிதி திருவிழா கோலாகலம்  :

சேலம் மாவட்டம் எடப்பாடி தாவாந்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஓம் காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று.

இன்று காலை பக்தர்கள் சரபங்காநதி ஆற்றிற்க்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக கோவில் வரை வந்து முதலில் கோவில் பூசாரி பூங்கரத்துடன் தீ மிதித்த
பின்னர் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் அக்கினி குண்டத்தில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து பல்வேறு பக்தர்கள் எலுமிச்சை அலகு உள்ளிட்ட பல்வேறு அலகுகளை குத்திக் கொண்டும், முதுகில் அலகு குத்தி இளநீர் மற்றும் கார் ஆகியவற்றை இழுத்துச் சென்ற இக்காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. இந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ ஓம் காளியம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Related Link
தமிழக அரசுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி

தமிழக அரசுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க ராணுவத்துடன் கூகுள் ரகசிய AI ஒப்பந்தம்

1
8 mins agoshare
Google








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved