தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 16ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதுடன், உரிய பாதுகாப்பு வழங்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.சுமார் 1,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு என காவல் ஆணையர் அலுவலகத்தில் தரப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.