Also Watch
Read this
By: Manigandan Raja

கொள்ளை போகும் மண் :
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு ஆயிஷா பி நகர் பகுதியில் உள்ள மலைகுன்றில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து, சமம்
செய்வதாக கூறி இரவு பகலாக, அதிக அளவு மண் கடத்துவதாகவும், ஆம்பூர் வட்டாச்சியரிடம், புகார் மனு அளித்தும்.
வருவாய்துறை அதிகாரிகள், இதுகுறித்து கண்டுக்கொள்ளவில்லையெனவும், மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த போது, ஆட்சியர், மண் கடத்தும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய உத்தரவிட்டும், வட்டாச்சியர் இதுகுறித்து.
எவ்வித நடவடிக்கையும், எடுக்கவில்லையெனவும், மேலும் ஆளும் கட்சியினர் மண் விவகாரத்தில், அமைச்சர் வரை தொடர்பு இருப்பதாகவும், தங்களை தொடர்ந்து மிரட்டல் விடுவதாகவும், தங்களது, உயிருக்கு, உத்திரவாதம் இல்லையெனவும்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி இன்று வாணியம்பாடி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நாம்தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved