Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பறவைகள் நாசம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சேல்விழி கிராமத்தில் ஏக்கர் கணக்கில் உள்ள நெற்பயிர்களை சிட்டுக்குருவி, மயில் போன்ற பறவைகள் கொத்தி தின்பதுடன், அவைகளை வீணாக்குவதாக விவசாயிகள் கூறினர். மழை வெள்ள பாதிப்பை சமாளித்த நிலையில், தற்போது பறவைகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved