news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மோடியின் முரட்டு அடிமை இபிஎஸ் என உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

மோடியின் முரட்டு அடிமை இபிஎஸ் என உதயநிதி விமர்சனம்

திருவண்ணாமலை

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் போல், மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி என்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார். அதிமுகவை அடிமைப்படுத்தி உள்ள டெல்லிக்கு, தமிழ்நாடு என்றுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் என்றும் பரப்புரையில் பேசினார்.

திருவண்ணாமலையில் உதயநிதி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து, திருவண்ணாமலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
முரட்டு பக்தர்கள், முரட்டு கட்சித் தொண்டர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் முரட்டு அடிமையாகத் திகழ்கிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடிபணிந்து, பாரதிய ஜனதா கட்சியைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர இபிஎஸ் முயன்று வருகிறார்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின விமர்சித்தார்.

சமூக வலை தளத்தில் பதிவு
திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட புகைப்படங்களை தமது சமூக வலை தளத்தில் பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, இன்றைய தினம் வள்ளுவர் சிலை அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தோம்.

* பள்ளி மாணவர்களுக்கு - 'காலை உணவுத் திட்டம்' , 'இல்லம் தேடி கல்வி'

* கல்லூரி மாணவ மாணவிகளுக்கு - 'புதுமைப் பெண்' , 'தமிழ்ப் புதல்வன்', லேப்டாப் திட்டம்

* இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு - 'நான் முதல்வன்'

* பெண்களுக்கு- 'விடியல் பயணம்', 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை'

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்
அனைத்து தரப்பினருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வரும் சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்டு, சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினோம். தமிழ்நாட்டின் உரிமைகளை டில்லிக்கு அடகு வைக்கத் துடிக்கும் முரட்டு அடிமைகளின் சூழ்ச்சிகளுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
முதலமைச்சர் வாகனத்தில் பறக்கும் படை ஆய்வு

முதலமைச்சர் வாகனத்தில் பறக்கும் படை ஆய்வு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுரை மத்திய தொகுதி பகுதியில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்

0
12 mins agoshare
மதுரை நாம் தமிழர் கட்சி போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved