news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மல்லிகேஸ்வரர் கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

மல்லிகேஸ்வரர் கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு

மாமல்லபுரம்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில், நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்தார். அப்போது, செல்பி எடுக்கும் ஆர்வத்தில் கையில் செல்போனுடன் வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தனர்.

மல்லிகேஸ்வரர் கோயிலில்...
பிரபல தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் வலம் வருகிறார். இவர் அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெற உள்ள கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த கார் ரேசில் நடிகர் அஜித் வெற்றி பெற வேண்டி, அவரது நண்பர் கார்த்திகேயன், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு செய்து ருத்ராக்ச மாலை வழங்குவதாக வேண்டி கொண்டார். அதன் பேரில் ருத்ராக்ச மாலையை பெற்றுக்கொண்டு, சிவ லிங்க வழிபாடு செய்ய நடிகர் அஜித்குமார் வந்திருந்தார்.

பின்னால் ஓடி வந்த பக்தர்கள்
இந்த கோயிலில் பிரதோஷ விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் நடிகர் அஜித் வந்ததை பார்த்து, திபுதிபு என ஓடிவந்து, கோயிலின் மூலஸ்தான வாசலில் சூழ்ந்து கொண்டனர்.

பிறகு, நடிகர் அஜித்க்கு மாலை அணிவித்து ருத்ராக்ச மாலை வழங்கப்பட்டது. அதனை பெற்று கொண்டு அவர் வெளியேற முற்பட்ட போது, பக்தர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். இதனால், மிகவும் தர்ம சங்கடத்தில் கர்ப்பகிரக மூலஸ்தானத்தை விட்டு வெளியேற முடியாமல் 10 நிமிடங்கள் அஜித் தவித்தார்.

பிறகு ஒரு வழியாக வேகமாக அவர் செல்ல முயன்றபோது பக்தர்கள் அவரை பின்தொடந்து ஓடினர்.


சூழ்ந்து கொண்டவர்களால்...
பிறகு, காரில் ஏறி செல்லமுடியாத அளவில் பக்தர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, பாதுகாவலர்கள் பக்தர்களை விலக்கி வழி ஏற்படுத்தியவுடன் அவரது கார் நீலாங்கரை வீட்டிற்கு புறப்பட்டு சென்றது. பக்தர்களின் செயலால் சுதந்திரமாக அஜித் சிவ தரிசனம் செய்ய முடியாமல் அவசர, அவசரமாக 20 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

Related Link
10 வீடுகள், 5 கார்கள், ரூ.620 கோடி

10 வீடுகள், 5 கார்கள், ரூ.620 கோடி

            



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளையாட்டு செய்திகள்

1
5 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved