விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது கொரியர் வேன் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநரும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம், சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் விடுவதற்காக தனது 18 வயது மகள் சுமித்ராவை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். மாயத்தேவன் பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கொரியர் வேன் பலமாக மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அதில் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொரியர் வேன் ஓட்டுநர் உதயகுமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.