Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகள் நிபந்தனைகள் இல்லாமல் கடன்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மழையினால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பயிர் காப்பீட்டு தொகையும் கிடைக்காத நிலையில், தற்போது நிபந்தனை இன்றி கடனுதவி மற்றும் உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை மானிய விலையில் வழங்கினால் மட்டுமே பாதிப்பிலிருந்து மீள முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved