கரூரில் கல்குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றும், கண் துடைப்புக்காக வழக்கு பதியப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ-வை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மருத்துவக்குடி பகுதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும்தானா? வயலின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்களை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டும் எம்.எல்.ஏ-வை கைது செய்யாதது வருத்தமளிப்பதாகவும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.