Also Watch
Read this
By: Manigandan Raja

பணம் வரவு வைக்கப்படவில்லை :
அரசு நடத்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் முட்டைகளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளனர்.
தொடர்ந்து சுமார் மூன்று மாதத்திற்கு மேலாகியும் தற்போது வரை அவர்களது வங்கி கணக்கிற்கு நெல்லிற்கான பணம் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அம்பை, கல்லிடைக்குறிச்சி விக்ரமசிங்கபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சார்பாக வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து இன்று அம்பாசமுத்திரத்தில் கண்டனார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பிய நிலையில், இப்பகுதி விவசாயிகளுக்கு மட்டும் சுமார் 83 கோடி ரூபாய் வரை பணம் வரவு வைக்க
வேண்டி உள்ளது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
மேலும் தற்போது தண்ணீர் திறந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved