நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே அம்மன் குளத்தை சுற்றியுள்ள நடை பாதையை தூய்மை படுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நடைபாதையில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாக நகர்மன்ற தலைவருக்கு வந்த புகாரின் பேரில், தூய்மை பணியாளர்களை ஒன்றிணைந்து 1.67 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்மன் குளத்தை சுற்றி சுத்தம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சுற்றுப்புற தூய்மையை வேண்டி கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.