தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் திமுக மாவட்ட துணை செயலாளரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரான தமிழனை திமுக நிர்வாகியான துரைமுருகன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.