தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் இல்லாததால், குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். அங்கு செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தருவதாக கூறி, அந்த இடத்தில் தொடக்கப் பள்ளி கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது.