கரூர் பெருந்துயர சம்பவம் குறித்து, சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் 4ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 41 பேர் பலியான சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களையும், அதன் உரிமையாளர்களிடமும் அதிகாரிகள், 4ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டனர். அதில் 3 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மட்டுமே ஆஜராயினர். மேலும், தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலகத்தின் உதவியாளர் குரு மற்றும் மற்றொரு நிர்வாகியிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.இதையும் பாருங்கள் - கரூர் விவகாரம், சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை | CBI investigation | TVK Vijay news | Breaking News