திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கிச் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற லாரியை OVERTAKE செய்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.